மேல்மருவத்தூர் ஊராட்சி தலைவருக்கு போட்டியிடும் லட்சுமி பங்காரு அடிகளார் சொத்து மதிப்பு எவ்வளவு?

சென்னை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார், மேல்மருவத்தூர் ஊராட்சியில் தலைவர் பதிவிக்கு போட்டியிடுகிறார். இதையொட்டி, சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் செல்வராணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், இவருடைய சொத்து மதிப்பு ரூ.25 கோடி என்பதற்கு பதிலாக ரூ.250 கோடி என தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, மீண்டும் புதிய வேட்பு மனுவை லட்சுமி பங்காரு அடிகளார் ஒன்றிய அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அதில், அசையும் சொத்து ரூ.9,54,95,146. அசையா சொத்து ரூ.16,02,80,003 என மொத்தம் ரூ.25,57,75,149 சொத்து மதிப்பு என குறிப்பிடப்பட்டு இருந்தது.

Related Stories: