ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து டெலிவரி ஊழியரிடம் வழிப்பறி: வாலிபர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 8வது பிளாக் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம் (20), ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, வியாசர்பாடி ஜே.ஜே.நகர் 7வது தெருவை சேர்ந்த ஒருவர், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தார். இதை, டெலிவரி செய்ய சிவப்பிரகாசம் சென்றபோது, அங்கிருந்த நபர் தனது கூட்டாளியுடன் சேரந்து, சிவப்பிரகாசத்தை தாக்கி, பைக், செல்போன் மற்றும் 500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினார். புகாரின்பேரில், எம்கேபி நகர் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, எம்கேபி நகரை சேர்ந்த சக்திவேல் (20), தனது கூட்டாளியுடன் சேர்ந்து இதில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்தனர். அவரது கூட்டாளி எபி (20) என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>