புதுடெல்லி: எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எல்ஐசி நிறுவனத்தில் வளர்ச்சி அதிகாரிகளாக (டெவலப்மென்ட் ஆபிசர்ஸ்) செயல்படுபவர்கள் தங்களது குழு முகவர்கள் மொபைல் செயலியை எப்படி பயன்படுத்துகின்றனர், குழுவின் அன்றாட நடவடிக்கை என்ன என்பதை கண்காணிப்பதுடன், பிரீமியம் வசூலித்தல், முகவர்களின் செயல்பாடு, வருங்கால என்டிஆர்டி, செஞ்சுரியன் முகவர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிய வசதியாக பிரகதி (Performance Review Application Growth and Trend Indicator) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் விரிவடைந்து வரும் கால கட்டத்தில், வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை சிறந்த முறையில் சேகரிப்பது அதிகாரிகள் தங்களது கடமையை சரி வர செய்வதற்கு அவசியமாகிறது.