சிமோனா ஹாலெப் திருமணம்

லண்டன்: ருமேனியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப். 29 வயதான ஹாலெப் 2017-19ம் ஆண்டு கால கட்டத்தில் 64 வாரங்களில் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்துள்ளார். தற்போது தரவரிசையில் 11வது இடத்தில் இருக்கும் ஹாலெப், 2018ம் ஆண்டு பிரஞ்ச் ஓபன், 2019ம் ஆண்டு விம்பிள்டன் என 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அண்மையில் நடந்த யுஎஸ் ஓபன் தொடரில் 4வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்நிலையில் தனது காதலரான தொழிலதிபர் டோனி ஐருக்கை  நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டார்.

தனது சொந்த ஊரான கான்ஸ்டன்டாவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு ஹாலெப் கூறுகையில், நான் உணர்ச்சிவசப்படுகிறேன். இவை கிராண்ட்ஸ்லாம் வென்றதை விட வித்தியாசமான உணர்ச்சி, இது எனது தனிப்பட்ட பகுதி, இது மிகவும் முக்கியமான படியாகும், அது நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.  திருமண படங்களை ஹாலெப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories:

>