சென்னை: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இணைந்து கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர். கடற்கரையில் உள்ள பாஜக கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை அண்ணாமலை, எல்.முருகன் ஏற்றினர்.
