துளித்துளியாய்........

* பிபா உலக தரவரிசை  பட்டியலில் 105வது இடத்தில் இருந்த இந்தியா 107வது இடத்துக்கு  தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து நீண்ட நாட்களுக்கு பிறகு 3வது இடத்தை  பிடித்துள்ளது. முதல் இடத்தில் பெல்ஜியம், 2வது இடத்தில் பிரேசில் ஆகியவை  உள்ளன. உலக சாம்பியன் பிரான்ஸ் 4வது இடத்திலும், ஐரோப்பிய சாம்பியன்  இத்தாலி 5வது இடத்திலும், அர்ஜென்டீனா 6 வது இடத்திலும் இருக்கின்றன.

* துரந்த்  கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடப்பு சாம்பியன் கோகுலம் கேரளா  1-0 என்ற கோல் கணக்கில்  ஐதராபாத் எப்சி அணியை வீழத்தியது.

* கால்பந்து  உலகின் உச்சம்  பீலே(பிரேசில்),  பெருங்குடல்  கட்டியை அகற்றுவதற்கான  அறுவை சிகிச்சை முடிந்து ஐசியூவில் இருந்து சாதாரண அறைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.  தான் நலம் பெற வேண்டிக் கொண்ட ரசிகர்களுக்கும், நலன்  விரும்பிகளுக்கும் ஊடகம் மூலம்  நன்றி தெரிவித்துள்ளார்.

* கொரோனா  தொற்று காரணமாக  தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்து வீச்சு  பயிற்சியாளர் அருண் பாரத், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் இன்னும்  இங்கிலாந்தில் குவாரன்டைனில் இருக்கின்றனர். அவர்கள் 10 நாட்கள்  குவாரன்டைன் முடித்து விட்டாலும், விதிமுறைகளின்படி    ஆர்டி பிசிஆர்  சோதனை, சிடி ஸ்கேன் சோதனை ஆகியற்றில் நல்ல முடிவு  ஏற்பட்டால் மட்டுமே  இந்தியா திரும்ப இங்கிலாந்து அரசு அனுமதிக்கும்.

Related Stories:

>