மகப்பேறு விடுப்பு வழங்குவதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: மகப்பேறு விடுப்பு வழங்குவதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை  என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. பணி வரன்முறை செய்யப்பட்ட - செய்யப்படாத ஊழியர்கள் இடையே பாகுபாடு காட்டுவதில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு ஆகியிருந்தால் மகப்பேறு விடுப்பு பெறலாம். மகப்பேறு விடுப்பு 270 நாட்களிலிருந்து 365 நாட்களாக உயர்த்தி ஆகஸ்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கறிஞர் ராஜகுரு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Related Stories: