21 மணி நேரத்திற்கு ரூ.500 பார்க்கிங் கட்டணமா?: மதுரை ரயில் நிலையத்தில் அரங்கேறும் பகல் கொள்ளை...வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

மதுரை: விமான நிலையத்தை போன்று மதுரை ரயில் நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மதுரை ரயில்வே நிலைய கார் பார்க்கிங், 3 மாதத்திற்கு ஒருமுறை தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி கார் பார்க்கிங் கட்டணமாக முதல் 3 மணி நேரத்திற்கு 30 ரூபாயும், அடுத்த 3 மணி நேரத்திற்கு 50 ரூபாயும் அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 70 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

விமான நிலையத்தை போன்று கட்டணம் வசூலிப்பதாக அவர்கள் புகார் கூறுகின்றனர். மேலும் 21 மணி நேரத்துக்கு ரூ.500 வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். ரயில் நிலைய பார்க்கிங்கில் தேவையின்றி வாகனங்களை நீண்ட நேரமாக நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவே இதுபோன்ற நடைமுறை செயல்படுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: