போக்சோ வழக்குகளை முடிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  

பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்தமட்டிலும், இந்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்சோ வழக்குகளை விரைந்து விசாரித்து, நீதி வழங்கிட அனைத்து மாவட்டங்களிலும் தனி நீதிமன்றங்கள் நிறுவ அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.  எதிர்க்கட்சித் தலைவர் இங்கே பேசியபோது, தமிழ்நாடு முழுவதும் 4.64 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன என்றும், அவற்றில் 2.50 லட்சம் கேமராக்கள் சென்னை மாநகரில் அதிமுக ஆட்சியில் பொருத்தப்பட்டன என்றும் தெரிவித்தார். ஆனால், உண்மை என்னவென்றால், கேமராக்களை வைத்தார்களே தவிர, அதைப் பராமரிக்க கடந்த கால ஆட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுகுறித்து ஆய்வு செய்து, கேமராக்களை வைக்க, பராமரிக்க தனி நிதி ஒதுக்கி செயல்படுத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: