விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்-நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கண்டாச்சிபுரம் : விழுப்புரம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறு சிறு பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.விழுப்புரம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து திருப்பதி, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு செல்வோரும், வெளி மாநிலங்களிலிருந்து புதுவை, விழுப்புரத்திற்கு வரும் வாகன ஓட்டிகளும் பெரும்பாலும் இவ்வழியையே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விழுப்புரம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற பொதுமக்களும் இவ்வழியையே நாள் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் முதல் மாவட்ட எல்லையான மழவந்தாங்கல் சோதனை சாவடி வரை 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு வளைவு பகுதிசாலை, ஊர்ப்புற சாலை பகுதிகள் போன்ற இடங்களில் சிறு சிறு பள்ளங்கள் அதிகளவில் உள்ளது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்கின்றனர். எனவே இதனை மாவட்ட நெடுஞ்சாலை துறையினர் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: