போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக தலிபான் ‘புர்கா’ படைப்பிரிவு: காபூலில் துப்பாக்கி முனையில் பயிற்சி.!

காபூல்: ஆப்கானில் தலிபான்களுக்கு எதிராக போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக தலிபான் பெண்கள் புர்கா படைப்பிரிவு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். ஆனால், அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில பெண்கள் அமைப்பினர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். பெண்களை பெண் போலீஸ் துணையுடன் எதிர்கொள்வதை போன்று, தலிபான் பெண்கள் படை உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள், போராட்டம் நடத்தும் பெண்களை ஒடுக்கிவருகின்றனர். இதற்காக காபூல் பல்கலைக்கழகத்தில் தலிபான் ஆதரவு பெண்கள் படைக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தலிபான்களின் கோட்பாட்டின்படி ெபண்கள் ‘புர்கா’ படைப்பிரிவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பெண்களை எதிர்கொள்வது எப்படி? என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் பங்கேற்ற புர்கா அணிந்த பெண்களின் கைகளில் பேனர் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பேனர்களில் ஆங்கிலத்தில் சில வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. அதில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் சித்திரவதை செய்யப்படுவதில்லை என்று எழுதப்பட்டிருந்தது. அந்த பெண்களை சுற்றிலும் ஆயுதமேந்திய தலிபான்கள் நிற்கின்றனர். தலிபான்களால் அந்நாட்டு பெண்கள் திருப்தி அடைந்திருந்தால், அவர்கள் ஏன் துப்பாக்கி முனையில் அமரவைக்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பி உள்ளன. அந்த கூட்டத்தில் இருந்த பெண்களில் சிலர், தலிபான் உத்தரவுக்கு எதிராக போராடும் பெண்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: