64வது நினைவு தினம்: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி

பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரன் 64வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.  இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். அவரது சொந்த ஊரான செல்லூர் கிராம மக்கள் ஊர்வலமாக சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இமானுவேல் சேகரன் குடும்பத்தினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், எம்பிக்கள் நவாஸ்கனி, தனுஷ் குமார், எம்எல்ஏக்கள் முருகேசன், வெங்கடேசன், ராஜா, தமிழரசி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் செல்வபெருந்தகை, மாநில பொறுப்பாளர் மயூரா ஜெயக்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்பி அன்வர்ராஜா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், பாமக, புதிய தமிழகம்  உள்பட பல்வேறு கட்சியினர் சமுதாய அமைப்பினர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  இமானுவேல் சேகரன் உருவ படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு அஞ்சலி செலுத்தினார். புதுக்கோட்டையில் திமுக இளைஞரணி செய லாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ,  அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

Related Stories: