திண்டுக்கல் அருகே 15 கிராம மக்கள் செல்லும் சாலை சீரமைக்கப்படுமா?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 15 கிராம மக்கள் செல்லும் ரோடு சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல் அடியனூத்து ஊராட்சி வாழைக்காபட்டி பிரிவு முத்தமிழ்நகரில் சாலை சேதமடைந்துள்ளது. இச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்தப் பகுதியில் இருந்து கண்ணாரபட்டி, ஏ.வெள்ளோடு உட்பட 15 கிராமங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால், சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் சரி செய்யப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

மேலும் சாக்கடை வாறுகால் தூர்வாராததால் கழிவுநீரும் ரோட்டில் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்தப் பகுதி வழியாக அரசு பஸ் தினமும் நான்கு முறை செல்கிறது. இதனை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஊராட்சி நிர்வாகம் குடிநீர், நிலவரி, வீட்டு வரி ஆகியவற்றை சரியாக வசூல் செய்து விடுகிறது.

ஆனால், சாலை வசதியையும், சாக்கடை கால்வாய் வசதியையும் செய்வதற்கு முன்வருவதில்லை. நெடுஞ்சாலைத்துறையில் முறையீட்டும், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும்

சாலைக்கு வழி பிறக்கவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, 15 கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்றனர்.

Related Stories: