வருவாய் பற்றாக்குறை நிதி தமிழகத்துக்கு ரூ.183 கோடி: ஒன்றிய அரசு ஒதுக்கீடு

புதுடெல்லி: மாநிலங்களுக்கு 6வது தவணையாக ரூ.9,871 கோடி வருவாய் பற்றாக்குறை நிதியை  ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 17 தகுதி வாய்ந்த 17 மாநிலங்களுக்கு, 15வது நிதிக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், வருவாய் பற்றாக்குறை நிதியை ஒன்றிய அரசு மாதந்தோறும் தவணை முறையில் அளித்து வருகிறது. இந்நிலையில், 6வது தவணையாக தமிழகம், ஆந்திரா, அசாம்,  அரியானா, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை ஒன்றிய அரசு நேற்று விடுவித்தது. இதில், தமிழகத்துக்கு மட்டும் ரூ.183.67 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் 17 மாநிலங்களுக்கும் மொத்தம ரூ.59,226 கோடி நிதியை விடுவித்து இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: