பாஜ பிரமுகர்களான ஹெலிகாப்டர் பிரதர்சின் சொத்து விவரம் தாக்கல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜ பிரமுகர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகிய இருவரும் ‘‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’’ என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் கைதான அகிலாண்டம் மற்றும் நிதி நிறுவன அலுவலக பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் ஐகோர்ட் கிளையில் ஜாமீன் கோரி மனு செய்தனர். இம்மனு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு விரைவில் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, நிதி நிறுவனம் நடத்திய வர்களுக்கு எங்கெல்லாம் சொத்துகள் உள்ளன? அதன்  முழு விவரங்கள் என்ன? இவர்களுக்கு குவைத் மற்றும் மலேசியாவில் நிறுவனங்கள் உள்ளதா?, நிறுவனங்கள் இருந்தால் அதன் முழு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை செப்.16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories: