மின்வாரியத்துக்கு 2020-21ம் நிதியாண்டில் ரூ.12,686 கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட எரிசக்தித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருப்பதாவது:

* மின்வாரியத்துக்கு 2015-16ம் நிதியாண்டில் ரூ.5,786.81 கோடி; 2016-17ம் நிதியாண்டில் ரூ.4,348.76 கோடி; 2017-18ம் நிதியாண்டில் ரூ.7,760.78 கோடி; 2018-19ம் நிதியாண்டில் ரூ.12,623.42 கோடி; 2019-20ம் நிதியாண்டில் ரூ.11,964.93 கோடி; 2020-21ம் நிதியாண்டில் ரூ.12,685.85 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

* உதய் திட்டத்தின் மூலம், 31.3.2021 அன்று உள்ளபடி நிலுவை கடன் தொகை ரூ.1,34,119.94 கோடி ஆகும்.

* 2030ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து 20,000 மெகாவாட் மின் திறனை சேர்க்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

* குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் இணைந்து ஆற்றல் தணிக்கை செய்வதன் மூலம் குறு, சிறு, நடுத்தர நிறுவனத்துறையில் படிவ எரிபொருள் பயன்பாடு மற்றும் வழக்கமான ஆற்றல் நுகர்வு ஆகியவற்றைக் குறைக்க குறு, சிறு நடுத்தர நிறுவனத் துறைக்கான நிலையான ஆற்றலை மையப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த திட்டத்தை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை ஊக்குவித்து செயல்படுத்தும்.

* 7 ஆண்டாக நஷ்டம்

அமைச்சர் வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பு: தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம்.  கடந்த 10 வருடங்களில் 7 ஆண்டுகள் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக  திரட்டப்பட்ட இழப்புகள் 31.3.2021 நிலவரப்படி ரூ.6,782.35 கோடி. நடப்பு நிதியாண்டு 2021-22ல் மதிப்பிடப்பட்டுள்ள வருவாய்  இழப்புகள் ரூ.1,778.17 கோடி ஆகும்.

Related Stories: