தடுப்பூசி போடாதவங்களுக்கு சம்பளம் முழுசா கிடைக்காது: அசாம் அமைச்சர் அதிரடி

கவுகாத்தி: அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேஷாப் மஹந்தா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முதல் தவணை தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அலுவலகங்களில் அனுமதிக்கப்படுவார்கள். திங்கட்கிழமை முதல் அரசு அலுவலகம், கல்வி மற்றும் வணிக நிறுவனங்களின் வாயிலில், ‘நாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்’ என்று சுய அறிவிப்பை ஊழியர்கள் வெளியிட வேண்டும். இதுபோல், தனியார் அலுவலகங்களும் தங்களின் சுய அறிவிப்புடன் கூடிய பேனரை நிறுவ வேண்டும். தடுப்பூசி போடவில்லை என்ற காரணத்தால் அலுவலகம் வராத நாட்களுக்கு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். சுய அறிவிப்பில் பொய்யான தகவல் தரும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: