4 மாதங்களுக்கு பின் முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு!: வன விலங்குகளை காண குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்து இருக்கும் முதுமலை புலிகள் காப்பகம் 4 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட புலிகள் காப்பகம், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் கைகளில் கிருமிநாசினி தெளித்து உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே வனவிலங்குகளை பார்க்க வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.

வரும் திங்கட்கிழமை முதல் யானை சவாரி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான ஒத்திகை நிகழ்வு இன்று நடைபெற்றது. இதேபோல் முதுமலையில் உள்ள சுற்றுலா விடுதிகளும் வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வன விலங்குகளை காண குடும்பத்தினருடன் வருகை தந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

Related Stories: