தான் யார் என்பதையே மறக்கும் கொடுமை 40 வயதினரை தாக்கும் புதிய அல்சிமர் நோய்: சுவீடன் பல்கலை. ஆய்வில் கண்டுபிடிப்பு

துபாய்: ‘அல்சிமர்’ எனும் ஞாபக மறதி நோய் பெரும்பாலும் 60 வயதை தாண்டியவர்களை பாதிக்கும் என மருத்துவ உலகின் பரவலான கருத்து. இந்நோயால் பாதித்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளை இழந்து, நாளடைவில் தான் யார் என்பதை மறக்கும் கொடுமையும் ஏற்படும். பெரும்பாலும் மரபியல் ரீதியாகத்தான் இந்நோய் வருவதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் 60 வயதை கடந்த 100 பேரில் 5 பேரும், 75 வயதை கடந்தவர்களில் 4ல் ஒருவரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் 39 லட்சத்திற்கும் அதிகமானோரும், உலகளவில் 4 கோடி பேருக்கும் அதிகமானோரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக் கழகத்தின் பொது சுகாதாரம் மற்றும் பராமரிப்பு அறிவியல் துறையை சேர்ந்த ஆய்வாளர்கள், 40 வயதிலேயே தாக்கக் கூடிய புதிய வகை அல்சிமர் நோயின் வடிவத்தை கண்டு பிடித்துள்ளனர். இதை, ‘உப்சாலா ஏபிபி டெலிசன்’ (Uppsala APP deletion) என அடையாளப்படுத்தி உள்ளனர். மேலும், வயதானாலும் முடிந்த வரை வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், மூளையை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்து கொண்டால் அல்சிமர் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

Related Stories: