கிருஷ்ணகிரியில் தொடர் வெற்றி வீரனாக திகழ்ந்து வந்த காளை நந்தி தேவா உயிரிழப்பு..!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த காளை நந்தி தேவா உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் கடந்த 5 ஆண்டுகளாக நந்தி தேவா என்ற காளையை வளர்த்து வருகிறார். அவருடைய காளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் எருதாட்ட போட்டிகளில் கலந்து கொண்டு தொடர் வெற்றிகளை குளித்து வந்தது.

நந்தி தேவா கலந்து கொள்ளக் கூடிய எருதாட்ட போட்டிகளில் காளையின் வேகத்தை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காளைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காளையின் வயிற்றில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காளைக்கு  சிகிச்சை அளிக்க் வெளியூர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தபோது திடீரென காலை உயிரிழந்தது.

காளை நந்தி தேவா உயிரிழந்த சம்பவம் காட்டுத்தீ போல் பல்வேறு மாவட்டங்களிலும் பரவியதை தொடர்ந்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் நந்திதேவாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நந்தி தேவாவை மாடுபிடி வீமேற்கொள்ளப்பட்டது. குடும்ப உறுப்பினர்களாக பார்த்து வந்த நிலையில் தற்போது அந்தக் காளை இறந்ததால் காளைக்கு முறையாக மாளைகள் அணிவிக்கப்பட்டு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர் வெற்றி வீரனாக திகழ்ந்து வந்த காளை நந்தி தேவா உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: