சுதந்திர தின கொண்டாட்ட பேனரில் நேரு புறக்கணிப்பு: காங். தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎச்ஆர்) இணையதளத்தில், சுதந்திர போராட்ட தலைவர்கள் அடங்கிய சுதந்திர தின பேனர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், மதன் மோகன் மால்வியா, வீர் சாவர்க்கர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், சுதந்திரத்திற்காக பாடுபட்டவரும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவகர்லால் நேருவின் புகைப்படம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘இது மிகக் கொடூரமான செயல்’ எனக் கூறி உள்ளார். மூத்த தலைவர் சசிதரூர், ‘நேருவின் புகைப்படத்தை புறக்கணித்து ஐசிஎச்ஆர் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொண்டுள்ளது’ என்றார். கட்சியின் செய்தி தொடர்பாளரான கவுரவ் கோகாய், ‘‘ நேரு புறக்கணிப்பு அற்பமானது மட்டுமல்ல அநீதியானது’’ என்றார்.

Related Stories: