பனையூர் குப்பத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர்குப்பம் உள்ளது. இப்பகுதியில், 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் உள்ள சில சேதங்களை சீரமைக்க பொதுமக்கள் முடிவு செய்தனர். இதைதொடர்ந்து, கோயில் புனரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் முடிந்தது. இதையொட்டி கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, கடந்த 23ம் தேதி முதல் வாஸ்து சாந்தி, விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, புதிய விக்கிரங்கள் கண் திறத்தல், புண்யா வாசம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து, நேற்று காலை மங்கள வாத்தியத்துடன் 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பட்டு விமான கோபுரத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து கருவறையில் உள்ள அம்மனுக்கு பல்வேறு சிறப்பு தீபாராதனை, அபிஷேகங்கள் நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Related Stories: