கோம்பை மலையடிவாரத்தில் யானைகளால் வாழை, தென்னை தோட்டம் சேதம் : விவசாயிகள் பீதி

தேவாரம்: கோம்பை மலையடிவாரத்தில் இருந்து வட்டப்பாறை பகுதிக்கு வந்த யானைகள் வாழை, தென்னை தோட்டத்தை சேதப்படுத்தின.தேவாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் நெல்லி, மா, சப்போட்டா, தென்னை, வாழை விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில் அவ்வப்போது, காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கோம்பை மலையடிவாரத்தை ஒட்டிய வட்டப்பாறை பகுதியில் சின்னகண்ணு மற்றும் கண்ணன் என்பவர்களுக்கு சொந்தமான தோட்டங்களில் 3 காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.

இதில் சின்னகண்ணன் தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள் தென்னை மட்டுமின்றி, தண்ணீருக்கு பயன்படுத்தப்படும் பைப், மோட்டார் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக சேதப்படுத்தி சென்றுள்ளது. கண்ணன் தோட்டத்தில் வாழை மரங்களையும், தென்னையையும்  சேதப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், யானைகளின் நடமாட்டம் ஒவ்வொரு வருடமும், ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை இருக்கும். எனவே, இப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: