வத்திராயிருப்பில் 36 லட்சம் மதிப்பில் அதிமுக ஆட்சியில் மராமத்து செய்த கண்மாயை ஆய்வு செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. இந்த அணைகளுக்கு பாத்தியப்பட்ட நாற்பது கண்மாய்கள் உள்ளன. இதில் பெரியகுளம் கண்மாய் 907 ஏக்கர் பாசன வசதி கொண்டது. இந்த கண்மாய்க்கு வடக்கே விராக சமுத்திரம் கண்மாய் உள்ளது இந்த இரண்டு கண்மாய்க்கு இடைபட்ட கரையில் வத்திராயிருப்பிலிருந்து கூமாபட்டி செல்லும் சாலை உள்ளது. பெரியகுளம் கண்மாய் கூடுதல் பரப்பளவு உள்ளதால் தண்ணீா் கூடுதலாக நிரம்பும். 1984 மற்றும் 1992ம் ஆண்டுகளில் பிளவக்கல் பெரியாறு அணையில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்ெகடுத்தது. இதனால் அணையில் உள்ள மதகுகளை திறந்துவிடப்பட்டன. இதில் வத்திராயிருப்பு பெரியகுளம், விராகசமுத்திரம் கண்மாய்களும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வத்திராயிருப்பு நகருக்குள் வெ ள்ளம் சூழ்ந்து பலர் வீடுகள் மற்றும் உடைமைகள் இழந்தனர். உயிர்பலியும் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வத்திராயிருப்பு பொியகுளம் கண்மாய், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டில் மராமத்துப்பணி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை உள்ளது. இந்த பொியகுளம் கண்மாயில் எட்டு மதகுகள் உள்ளன. அதோடு கலிங்குகள் உள்ளன. இதில் மதகுகள் சரிவர ஏற்றி இறக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. கடந்த சிலநாட்கள் முன்பு இந்த கண்மாயில் தண்ணீர் இருந்தபோது மதகுகளை சாிவர அடைக்க முடியாமல் தண்ணீர் வீணாக வௌியேறிச் சென்றது. தற்போது கண்மாயில் வடபக்கம் உள்ள மதகுகளுக்கு முன்பு உள்ள பிளாட்பாரம் உடைந்த நிலையில் உள்ளது.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் குடிமாராமத்து என்னென்ன செய்வதற்கு எஸ்டிமேட் போடப்பட்டது? எஸ்டிமேட் போடப்பட்டபடி வேலை நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன் ஒரு கண்மாயில் மராமத்துப்பணி என்றால் கரைகளை மட்டும் பலப்படுத்துவதற்கு போடப்படுமா? அல்லது கண்மாயில் உள்ள மதகுகள், கலிங்குகள் பராமாிப்பு பணிகள் செய்வதற்கு சேர்த்து எஸ்டிமேட் போடப்படுமா? அத்துடன் ரூ.36 லட்சம் செலவழித்தும் மதகுகள் மற்றும் மதகுகளுக்கு முன்பு உள்ள பிளாட்பாரம் பராமரிப்பு இல்லாத நிலை உள்ளது. மழைக்காலம் துவங்கும் முன்பு இந்த பழுதுகளை சீரமைக்காவிட்டால் விவசாயம் செய்வதற்கு தண்ணீரை தேக்கமுடியாத நிலை ஏற்படும். எனவே, உடனடியாக மராமத்து பணிகளை செய்வதோடு, கடந்த ஆட்சியில் நடந்த குடிமராமத்துப்பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: