பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்-விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற தீர்மானம்

பெரம்பலூர் : பெரம்பலூரில் இந்திய கம்யூ. கட் சி நடத்திய மக்கள்நாடாளு மன்றக் கூட்டத்தில் விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மக்களைத் திரட்டி, மக்கள் நாடா ளுமன்றக் கூட்டம், பழைய பஸ்ஸ்டாண்டு அருகே காந்தி சிலைமுன்பு நடைபெற்றது. திமுக மாவட்டச்செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து துவக்க உரையாற் றினார் இந்திய.கம்யூ. கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி அறி முக உரையாற்றினார். கூட்டத்தில் இந்திய கம்யூ.கட்சியின் மாவட்டச்செய லாளர் ஞானசேகரன் மக்கள் நாடாளுமன்ற சபாநாயகராக தேர்வுசெய்யப்பட்டு அவையை நடத்தினார்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட். கட்சியின் முன்னாள் மாவ ட்டச் செயலாளர் வேணு கோபால் ஆகியோர் மத்திய அரசின் வேளாண்மைத் துறை அமைச்சராக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, மதிமுக மாநி ல உயர்மட்டக்குழு உறுப்பி னர் துரைராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுரேஷ், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தங்கராசு, நகர தலைவர் அக்ரி ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் ஜெயராமன், கம்யூ.கட்சி மா வட்டசெயற்குழுஉறுப்பினர் கலையரசி, இந்திய கம்யூ. கட்சி மாவட்ட துணை செய லாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் பாராளுமன்ற எம்பிக்களாகக் கலந்து கொண்டுபேசினர்.

கூட்டத்தில் பாஜக அரசின் ஜனநாயக நெறிமுறை மீறல்களை கண்டிப்பது, விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெறுவது, பெட் ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்துவது, பொதுத்து றை நிறுவனங்களை சீர ழிக்க கூடாது.அதிமுக ஆட் சியில் நிறைவேற்றப்பட்ட வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை பண்ணை ஒப்பந்தங்கள் மற்றும் சேவை சட் டம் 2019ஐ ரத்து செய்வது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: