செய்யாறு அருகே நள்ளிரவில் போன் செய்து பிளஸ் 2 மாணவிக்கு டார்ச்சர்: கல்லூரி மாணவர் மீது வழக்கு

செய்யாறு: செய்யாறு அருகே நள்ளிரவில் போன் செய்து பிளஸ் 2 மாணவியை டார்ச்சர் செய்த கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பிளஸ்2 மாணவி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது பெற்றோருடன் தூங்கினார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், ‘நான் உனது வீட்டின் அருகே இருக்கிறேன். நான் உன்னை தீவிரமாக காதலிக்கிறேன். உன்னை திருமணம் செய்துகொள்கிறேன். அதற்கு நீ சம்மதிக்க வேண்டும் ’ என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தனது பெற்றோருக்கு இதை தெரிவித்தார்.

இதையடுத்து மாணவி தனது பெற்றோருடன் வந்து பார்த்தபோது செய்யாறு அரசுக்கல்லூரி மாணவரான, அழிவிடைதாங்கி கிராமத்ைத சேர்ந்த வெங்கடேசன் மகன் குமார் என்பது தெரிய வந்தது. அப்போது அவர், மீண்டும் மாணவிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், குமாரை கடுமையாக எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து தொந்தவு செய்ததால் அவரை தாக்கி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து பெண்ணின் தந்தை பிரம்மதேசம் போலீசில் புகார் ெசய்தார். அதன்பேரில் எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார், மாணவிக்கு டார்ச்சர் கொடுத்த கல்லூரி மாணவர் குமார் மீது போக்சோ சட்டத்தில்  வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் மாணவியின் குடும்பத்தினர் தன்னை தாக்கியதாக கல்லூரி மாணவர் குமாரும் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் மாணவியின் தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: