பஞ்சாப்பில் அரசு, கட்சியை வழி நடத்த கொள்கை குழு: அமரீந்தர் சிங், சித்து ஒப்புதல்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் அமைச்சராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியில் இருந்து விலகிய சித்து, அமரீந்தருக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார். அடுத்தாண்டு இம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இவர்களின் மோதலால் கட்சியின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று சோனியா காந்தி நினைத்தார். இதனால், அமரீந்தரின் கடும் எதிர்ப்பையும் மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமித்தார். இதனால், இவர்களின் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாபில் ஆட்சியையும், கட்சியையும் வழி நடத்துவதற்கான உத்திகளை வகுக்க, 10 பேர் கொண்ட கொள்கை குழுவை அமைக்கும்படி  சோனியா காந்தி அறிவுறுத்தினார். இதன்படி, அமரீந்தர் தலைமையில் சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சர் பிரம் மொகிந்திரா, நிதி அமைச்சர் மன்பிரீத் சிங் பாதல், சமூக பாதுகாப்பு அமைச்சர் அருணா சவுத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் சித்து உள்ளிட்டோர் அடங்்கிய குழு அமைக்கப்பட உள்ளது. அமரீந்தரும், சித்துவும் நேற்று சந்தித்து இந்த பட்டியலை இறுதி செய்தனர்.

Related Stories: