ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகர திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை

டெல்லி: ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகர திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைச் செயல்படுத்தும் நகரங்களில் முதலிடத்தில் டெல்லியும் அடுத்து சென்னையும் உள்ளன. அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பு ஸ்மார்ட் சிட்டி திட்ட செயல்பாடு பற்றிய ஆய்வை வெளியிட்டுள்ளது. இந்தூர், சூரத் நகரங்களுக்கு அடுத்ததாக கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்துவதில் சிறப்பாக உள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நாடு முழுவதும் 47% பணிகள் நடந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ள 100 நகரங்களில் சென்னையும், கோவையும் இடம்பெற்றுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்துவதில் புதுவை, அமராவதி, முசாபர்பூர் போன்றவை பின்தங்கி உள்ளன.

Related Stories: