திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த உம்மன்சாண்டி ஆட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியவர் சரிதாநாயர். சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி கேரளம், தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானவர்களிடம் கோடிணக்கில் பணம் மோசடி செய்தார். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் காங்கிரஸ் எம்பி வேணுகோபால் உட்பட 6 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். இதுதொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் உம்மன்சாண்டி மீதான புகாரில் எந்த ஆதாரமும் இல்லை என்று குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்தது.
