சென்னை: மறைந்த ஒன்றிய அமைச்சரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சியாக திகழ்ந்தவருமான முரசொலி மாறனின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தலைவர் கலைஞர் அவர்களால் ‘எனது கண்ணின் கருவிழி’ என அழைக்கப்பட்டு, ‘கலைஞரின் மனசாட்சி’ என கழகத்தினரால் போற்றப்பட்ட மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கக்கூடிய முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள முரசொலி மாறன் திருவுருவச் சிலை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
