கேரளாவுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை ஓணம் பண்டிகையை ஒட்டி தொற்று அதிகரிக்க வாய்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. நோய் பரவல் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒன்றிய சுகாதாரகுழுவினர் வந்து தொற்று பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், குழந்தைகள் சுகாதாரத்துறை துணை ஆணையாளர் டாக்டர் பிரதீப் ஹல்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று திருவனந்தபுரம் வந்தனர். தொடர்ந்து முதல்வர் பினராய் விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் அதிகாரிகளுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். அப்போது கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி கொரோனா  பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: