ஆப்கான் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது: ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரேஸ் பேட்டி

லண்டன்: ஆப்கான் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரேஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதை அடுத்து, தலிபான்கள் பெரும்பான்மையான மாகாணங்களை கைப்பற்றினர். தலைநகர் காபூலையும் கைப்பற்றி உள்ளனர். இதனால், அந்நாட்டு அதிபர்  பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கனி, தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.

இதில் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரேஸ்; பயங்கரவாத அமைப்புகளின் சொர்க்கமாக ஆப்கான் மாறாமலிருக்க சர்வதேச சமூகத்தின் நடவடிக்கை தேவை. ஆப்கான் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்களை நம்மால் கைவிட முடியாது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஐநாவின் முழு ஆதரவு உண்டு. அடுத்து வரும் நாட்கள் முக்கியமானதாக இருக்கும்; உலகம் கண்காணித்துக்கொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அசச்சுறுத்தலை ஒடுக்க வேண்டும். ஐநாவுடன் உலக நாஉத்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். ஆப்கான் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆப்கான் மக்கள் நாடு கடத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Related Stories: