வ.உ.சி.யின் 150வது ஆண்டு விழாவை ஓராண்டுக்கு கொண்டாட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் நூற்றி ஐம்பதாவது ஆண்டு வரும் செப்டம்பர் 5ம் தேதி தொடங்குகிறது. அந்த நாளில் தொடங்கி 2022 செப்டம்பர் 5ம் தேதி வரை ஓராண்டுக்கு வ.உ.சி 150 விழாவை மத்திய, மாநில அரசுகள் கொண்டாட வேண்டும். பள்ளி, கல்லூரி பாட நூல்களில் வ.உ.சிதம்பரனாரின் தியாக வரலாற்றை சேர்க்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் உருவச்சிலையை திறக்க வேண்டும்; சென்னை உத்தண்டியில் செயல்பட்டு வரும் கடல்சார் பல்கலைக்கழகத்திற்கும், கடற்படை கப்பலுக்கும் அவரது பெயரைச் சூட்ட வேண்டும்; சென்னையில் வ.உ.சி வாழ்ந்த இல்லங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றுக்கு வெளியில் நினைவுப் பலகைகளை அமைக்க வேண்டும்; சென்னையில் வ.உ.சி 150வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் நினைவு அலங்கார வளைவு ஒன்றையும் அமைக்க வேண்டும். செப்டம்பர் 5ம் தேதி அவரது 150வது பிறந்த நாளில் அவரது உருவச்சிலைகளுக்கும், படங்களுக்கும் பா.ம.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

Related Stories: