விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வருத்தம்

டெல்லி: விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் தேசியக் கோடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார். போதுமான விவாதமின்றி சட்டங்கள் இயற்றப்படுவதால் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின் பேசிய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும் போது போதுமான விவாதங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார். அதாவது, நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது போதுமான விவாதங்களை இல்லாதது வருத்தம் அளிக்கிறது. போதிய விவாதங்கள் நடக்காததால் சட்டத்தின் உள்நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.

விவாதங்கள் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுவதால், ஏராளாமான வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏன் இத்தைகைய வகையில் சட்டங்களை உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை என்றும் சட்டம் இயற்றுதலில் நிறைய இடைவெளி இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில், நாடாளுமன்றம் ஒழுங்காக செயல்படுங்கள் என்பதை நாட்டின் உட்சபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசியபோது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories: