மகளிர் வீடுகளிலேயே காய்கறி உற்பத்தி செய்வதற்காக முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத்திட்டம்: மானிய விலையில் விதை தளைகள் வழங்கப்படும்; எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை: வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத்திட்டத்தின் மூலம் அன்றாட தேவைக்கான நஞ்சில்லா காய்கறிகளை மகளிர், தங்களது இல்லங்களிலேயே உற்பத்தி செய்வதற்கும், குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய 2 லட்சம் விதைத் தளைகள் மானியத்தில் வழங்கப்படும். மேலும், நகர்ப்புரங்களில் 6 வகை காய்கறி விதைகள் கொண்ட 1 இலட்சம் மாடித் தோட்டத் தளைகள் மானியத்தில் வழங்கப்படும்.

இதற்காக, காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக எக்டருக்கு ரூ.15,000 அல்லது இடுபொருட்கள் வழங்கி காய்கறி சாகுபடி பரப்பு உயர்த்தப்படும். மேலும், காய்கறிகள் குறைவாக சாகுபடி செய்யக்கூடிய 2,000 கிராமங்களில் மண்வளத்தை மேம்படுத்தி 1,250 எக்டர் பரப்பில் காய்கறி பயிரிடவும், 638 எக்டர் பரப்பில் பந்தல் அமைத்து கொடிவகைக் காய்கறிகளைப் பயிரிடவும், அனைத்து மாவட்டங்களிலும் 1000 எக்டர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மானியம் வழங்கப்படும். இத்திட்டம் 95 கோடி ரூபாய் செலவில் மாநில, ஒன்றிய அரசு நிதியுடன் செயல்படுத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

* தோட்டக்கலை கிடங்குகள் அமைப்பு

அமைச்சர், ‘தோட்டக்கலைப் பயிர்கள் அதிகமாக விளைவிக்கக்கூடிய மாவட்டங்களில், தோட்டக்கலைக் கிடங்குகள் அமைக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் கீரை, மிளகாய், கடலூர் மாவட்டத்தில் முந்திரி, பலா, நாமக்கல் மாவட்டத்தில் மிளகு, வெங்காயம், தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை, நெல்லி போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விதை முதல் சந்தைப்படுத்துதல் வரை அனைத்து சேவைகளும் வழங்கப்படும். இத்திட்டம் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்’ எனத்தெரிவித்தார்.

* கடலூரில் பலா சிறப்பு மையம்

இதேபோல், ‘கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் பலாப்பயிருக்கான சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, பல்வேறு ரகங்கள் உள்ளடக்கிய மரபணு தொகுப்பு அமைக்கப்படும். உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி வரை அனைத்து செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல்விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் 5 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய மாநில அரசின் நிதியோடு செயல்படுத்தப்

படும்’ என அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: