கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு ஒன்றிய அமைச்சர் குழு நாளை கேரளா வருகை: முதல்வருடன் ஆலோசனை

திருவனந்தபுரம்: நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்து விட்டது. கேரளாவில் மட்டும் குறையவில்லை. தினசரி சராசரியாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவி வருகிறது. இம்மாநிலத்தில் நேற்றும் 20,452 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது. கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 6 பேர் கொண்ட ஒன்றிய சுகாதார குழு நிபுணர்கள் கேரளாவுக்கு வந்தனர். அப்போது, 3 நாட்கள் தங்கி நோய் பரவல் அதிகமுள்ள இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், அந்த நிபுணர் குழு நோய் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து, மாநில சுகாதாரத் துறையினருடன் ஆலோசனை நடத்தியது. அதன் பிறகு டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான குழு நாளை கேரளா வருகிறது. இந்த குழு திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன், சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

Related Stories: