மஞ்சூர் கூட்டுறவு தேயிலை ஆலையில் பசுந்தேயிலைக்கு மாதவிலை ரூ.14 நிர்ணயம்

மஞ்சூர் : மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ.14 ஆக மாதவிலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 65ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு விவசாயிகள் தேயிலை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை முன்னிட்டு மாவட்டத்தில் 16கூட்டுறவு ஆலைகளும் நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஆலைகளும் இயங்கி வருகிறது.

இதில் கூட்டுறவு தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயி கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந் தேயிலைக்கு மாதம் ஒரு முறை இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் மூலம் மாதவிலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

 இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட கூட்டுறவு ஆலைகள் முலம் விவசாயிகளுக்கு பசுந்தேயிலை க்கான தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு ஆலைகள் கொள்முதல் செய்த பசுந்தேயிலைக்கு மாதவிலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உள்பட மாவட்டத்தில் பெரும்பாலான கூட்டுறவு ஆலைகளிலும் பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ.14 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: