ஆஸ்திரேலியா: சூயஸ் என்கிற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் கோவையில் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வந்த போது, அவர்களுடன் ஆஸ்திரேலியாவை பார்க்க சென்றது தான் வேலுமணியின் முதல் வெளிநாட்டு பயணம். சூயஸ் நிறுவனத்திற்கும் அமைச்சர் வேலுமணிக்கும் இப்படியான தொடர்பு இருப்பதால், தமிழ்நாட்டில் கொரோனா தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த நேரத்தில் தன் மகன் விகாஸ் வேலுமணியை பாதிப்பு அதிகமில்லாத ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தார்.