புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்-விவசாய தொழிலாளர் சங்கம், தொழிற்சங்கங்கள் நடத்தியது

பெரம்பலூர் : ஒன்றிய அரசு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சிஐடியூ விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக பெரம்பலூரில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.மத்தியஅரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் எனப்படும் 100 நாள் வே லைத் திட்டத்தை 200 நாட் களாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

100 நாள் வே லைத்திட்ட பணியாளர்க ளுக்கு குறைந்த பட்ச ஊ தியமாக ரூ600ஐ வழங்கிட வேண்டும் என்பன உள்ளி ட்டக் கோரிக்கைகளை வலி யுறுத்தி பெரம்பலூர் மாவ ட்ட சிஐடியூ, பெரம்பலூர் மா வட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங் கம் சார்பாக, பெரம்பலூரி ல் மனிதசங்கிலிப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்டு தொடங்கி நகராட்சி அலுவலகம் வழியாக தனியார் பெட்ரோல் பங்க் வரை நடை பெற்ற இந்த மனிதச் சங் கிலி போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் அகஸ்டின், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ரமே ஷ் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர். மா தர்சங்க மாவட்ட துணைத் தலைவர் கலையரசி சிஐ டியு மாவட்ட நிர்வாகிகள் ரெங்கநாதன், சண்முகம், சிவானந்தம் ஆகியோர் மு ன்னிலைவகித்தனர்.

இந்த மனித சங்கிலி போராட்ட த்தில் நகராட்சி ஊழியர் கள் சங்க மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ஆட் டோசங்க மாவட்டச் செய லாளர் (பொ) மல்லீஸ்குமா ர், போக்குவரத்து ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாநில நிர்வாகி கிருஷ்ணசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட் டோர் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.இதேபோல் பெரம்பலூர் புதுபஸ் பஸ்டாண்டில் நேற்று (9ம் தேதி) மாலை, ஒன்றிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக அனைத்துத் தொ ழிற்சங்கங்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் குமார், சிஐடியூ மாவட்டத் தலைவர் அகஸ்டின், ஏஐடியுசி மாவட்ட தலைவர் தியாகராஜன், ஹிந்து மஸ்தூர் சபா மாவட்ட தலைவர் மங்கையர்க்கரசி ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி, போக்குவரத்து கழக பணிமனை செயலா ளர் சுரேஷ்குமார், பொருளாளர் சங்கர் கணேஷ், மத்திய சங்க துணைத் தலைவர் கருணாகரன், சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள் சிவானந்தம், சண்முகம், ரெங்கநாதன், பன்னீர்செல்வம், ஏஐடியூசி மாவட்ட நிர்வாகி ராஜேந்திரன், ஹிந்து மஸ் தூர் சபா மாவட்டசெயலாளர் சின்னசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம்:

தொழிலாளிகளுக்கு விரோதமான 4 சட்டத் தொகுப்புகளையும், மக்கள் விரோத வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசைகண்டித்து ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்துக்கழக கிளை செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

கிளைத் தலைவர் கொளஞ்சி துவக்கி வைத்தார். சிஐடியு மத்திய சங்க துணைச் செயலாளர் நீலமேகம், அம்பேத்கர் தொழிற்சங்க நிர்வாகி அசோக் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொமுச கவுன்சில் மாவட்ட துணைச் சயலாளர் சம்மந்தம் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் சுப்பிரமணியன், முத்தையன், சரவணன், நடராஜன், ராமசாமி, சின்னத்துரை, சந்திரசேகர், மாதவன், வெங்கடாசலம், குமார், இளவரசன் உள்பட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். தொமுச பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

Related Stories: