நத்தமேடு ஊராட்சியில் மருத்துவம், கண் சிகிச்சை, ரத்த தான முகாம்கள்: அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், நத்தமேடு ஊராட்சி திமுக சார்பில் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், ரத்ததான முகாம் ஆகிய முகாம்கள் தொடக்க விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு மரக்கன்றுகளுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் தலைமை வகித்தார். ஒன்றிய பிரதிநிதி குமரேசன் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் த.எத்திராஜ், கே.கே.சொக்கலிங்கம், அன்புஆல்பர்ட், மகேஸ்வரி பால விநாயகம், எஸ்.ஜெயபாலன், ஏழுமலை, எஸ்.பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தனர். இதில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் முகாம்களை துவக்கி வைத்து, மரக்கன்றுகளுடன் நலத்திட்ட உதவிகளைை வழங்கினர்.

இதில் ஜெயா கல்வி குழுமங்களின் நிறுவன தலைவர் பேராசிரியர் அ.கனகராஜ், மாவட்ட துணை செயலாளர் கே.ஜெ.ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், பூவை எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, டி.முரளி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தொழுவூர் பா.நரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் இந்திரா பொன்குணசேகர், ஒன்றிய கவுன்சிலர் வ.ஹரி, ஜி.விமல்வர்ஷன்,  ஜோன்ஸ் பிரியதர்ஷினி ஸ்ரீதர், அபினேஷ், ரூபி குமரேசன், எட்வின், கெஜலட்சுமி, மகேஷ், இளங்கோ, சரவணன், பாலாஜி, அருள், சண்முகம், சதீஷ், பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: