சேலம் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மகன் மாயத்தில் திடீர் திருப்பம் பேஸ்புக்கில் பழகி 2 குழந்தைகளின் தாயை திருமணம் செய்த மாணவர்: குட்டு வெளிப்பட்டதால் ஏமாற்றியதாக கதறல்

சேலம்: சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அசோகன். நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது 24 வயது மகன் தனியார் கல்லூரியில் பிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த 3ம்தேதி மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை அந்த மாணவர், இளம்பெண் ஒருவருடன் ஜோடியாக அஸ்தம்பட்டி போலீசில் ஆஜரானார். தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். தகவலறிந்து மாணவரின் பெற்றோர் அலறியடித்துகொண்டு வந்தனர். போலீசிடம் தனது பெயரை அந்த பெண் மாற்றி மாற்றி கூறினார்.

ஆனால் அவரது உண்மையான பெயர் தனலட்சுமி(34) என்பதும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதும், அவரது ஊர் காரைக்குடி என்பதும் தெரியவந்தது.  விசாரணையில், ருசிகர தகவல் வெளியானது. சேர் ஷாட், பேஸ்புக் மூலம் இருவரும் கடந்த 2  ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தான் சென்னையில் இருப்பதாக அப்பெண் அன்பொழுக பேசியுள்ளார். அவரின் காதல் வார்த்தைகள் மாணவர் மூர்த்தியை அசைத்துள்ளது. இவரும் காதலில் விழுந்தார். இருவரும் சமயபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டது  போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு 2 குழந்தைகள் இருப்பதை தெரிந்து ெகாண்ட மாணவர் மூர்த்தி, கதறி அழுதார். நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என கூறினார். பின்னர் தனலட்சுமியை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். மாணவரும் பெற்றோருடன் புறப்பட்டார்.

Related Stories: