செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் திமுக சார்பில் கலைஞர் நினைவு நாளில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம்

காஞ்சிபுரம்: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.இதில் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட அவைத்தலைவர் சேகர், நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் குமார், குமணன், நகர அவைத் தலைவர் சந்துரு, ஜெகநாதன், கருணாநிதி, கன்னியம்மாள், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காந்தி சாலையில் தலைமை பொது குழு உறுப்பினர் செங்குட்டுவன் தலைமையில், கலைஞர் நினைவுநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. வட்ட பொறுப்பாளர் பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரங்கசாமி குளத்தில் தலைமை பொது குழு உறுப்பினர் சீனிவாசன், இளைஞரணி நிர்வாகி கார்த்திக் ஆகியோர் ஏற்பாட்டிலும், கச்சபேஸ்வரர் கோயில் அருகில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் தலைமையிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் வேல்முருகன், இளம்பரிதி, பிரகாஷ், கிரி உள்பட பலர் பங்கேற்றனர்.காஞ்சிபுரம் 5வது வட்ட திமுக சார்பில் பூக்கடை சத்திரம் பகுதியில் வட்ட பொறுப்பாளர் முத்துசெல்வம் தலைமையில் கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சிகாமணி, இளைஞரணி நிர்வாகி ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் கலைஞர் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமையில், திமுகவினர் கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பஸ் நிலையத்தில் கலைஞர் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சிக்கு குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் தலைமையில் கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர திமுக சார்பில், கலைஞர் நினைவுநாளையொட்டி, அவரது படத்திறப்பு விழா, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு ராட்டிண கிணறு அருகே நடந்தது. நகர திமுக செயலாளர் எஸ்.நரேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அன்புச்செல்வன், மீரா சபாபதி, ராஜி, மண்ணு, முனுசாமி, திருவள்ளுவன், சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு, கலைஞர் படத்தை திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், 500பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

இதேபோல், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆப்பூர் ஊராட்சியில், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் ஆப்பூர் சந்தானம் தலைமையில், கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சி திமுக சார்பில் வெண்பாக்கத்தில் ஒன்றிய திமுக பொறுப்பு குழு உறுப்பினர் வி.ஜி.திருமலை  கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர். இதில் நிர்வாகிகள் தியாகராஜன், மணி, சீனுவாசன், பிரகாஷ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறைமலைநகர் திமுக சார்பில் நகர செயலாளர் ஜெ.சண்முகம் கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். சிங்கபெருமாள்கோயில் ஊராட்சி திமுக சார்பில், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் கே.பி.ராஜன் தலைமையில், கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திம்மாவரம் ஊராட்சியில் அருள்தேவி, வெங்கடாபுரத்தில் தர்மன், கொளத்தூரில் சண்முகம், பாலூரில் முத்துகுமாரசாமி, மேலமையூரில் கருணாகரன் ஆகியோர் தலைமையில் கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மதுராந்தகம்: மதுராந்தகம் நகர திமுக அலுவலகத்தில் கலைஞர் நினைவு நாளையொட்டி, 300 பேருக்கு நகர செயலாளர் குமார் அன்னதானம் வழங்கினார். இதில், மாவட்ட பிரதிநிதி சிவலிங்கம், அவைத்தலைவர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மதுராந்தகம் 9வது வார்டு வடராயன் தெருவில், 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதில், முன்னாள் திமுக நகர செயலாளர்கள் பிரேம் சந்த், ராஜேந்திரன், நிர்வாகிகள் கே.ஜி.கிஷோர்குமார், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றிய, நகர திமுக சார்பில் கலைஞர் நினைவஞ்சலி திருப்போரூர் பஸ் நிலையத்தில் கலைஞரின் படத்துக்கு முன்னாள் எம்எல்ஏ இதயவர்மன் தலைமையில் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், மாவட்ட துணை செயலாளர் அன்புச்செழியன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் தையூர் வாசுதேவன், நகர செயலாளர் தேவராஜ், துணை செயலாளர்கள் மோகன், பரசுராமன், அவை தலைவர் பலராமன், முன்னாள் நகர செயலாளர் அஸ்கர் அலி, மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் சந்திரன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

கலைஞர் நினைவுநாளையொட்டி திருப்போரூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கேளம்பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தொகுதி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் தலைமை தாங்கினார். தனியார் மருத்துவமனை சார்பில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.சிறுசேரி ஊராட்சி செயலாளரும், முன்னாள் ஊராட்சி தலைவருமான எஸ்.எம்.ஏகாம்பரம் தலைமையில் கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாவலூர் ஊராட்சி செயலாளர் ராஜாராம் தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். கூடுவாஞ்சேரி: நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூர் திமுக சார்பில், கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் அவரது படத்தை திறந்து வைத்து,  காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, பேரூர் செயலாளர் வக்கீல் லோகநாதன் ஆகியோர் தலைமையில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துகொண்டு கலைஞர் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. பேரூர் மகளிரணி அமைப்பாளர் ஜான்சிராணி, இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: