நிரந்தர அதிகாரிகளை நியமித்து விட்டோம்: டிவிட்டர் பதில்

புதுடெல்லி:  வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகார்களை விசாரித்து தீர்வு காண இந்திய அதிகாரிகளை நியமிக்கும்படி ஒன்றிய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டாத்தை கொண்டு வந்தது. இதற்கு மற்ற சமூக வலைதளங்கள் உடன்பட்ட நிலையில், டிவிட்டர் மட்டும் முரண்டு பிடித்து வந்தது. இதனால், அரசுக்கும் டிவிட்டர் நிறுவனத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.

டெல்லி உயர் நீதிமன்ற்த்தில்  நடந்த இந்த வழக்கில், நிரந்தர அதிகாரிகளை நியமிக்காத டிவிட்டருக்கு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை டிவிட்டர் சமர்ப்பித்தது. ‘புகார்களை விசாரிக்கும் தலைமை அதிகாரி, உள்நாட்டு குறைதீர் அதிகாரி மற்றும் நோடல் அதிகாரி போன்றவர்கள் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி நிரந்தரமாக நியமிக்கப்பட்டு விட்டனர்’ என்று அதில் கூறியுள்ளது.

Related Stories: