பவானியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் சாக்கடையில் கொட்டி அழிப்பு

பவானி :   கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. அப்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து அதிகளவில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், தமிழக டாஸ்மாக் மதுக்கடைகளில் வாங்கி பதுக்கி வைத்தும் விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தடுக்கும் வகையில் பவானி போலீசார் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டதோடு, சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டோரை கைது செய்தனர். இதுதொடர்பாக, 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, 766 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த மதுபாட்டில்களை அழிக்க ஈரோடு உதவி ஆணையர் (கலால்) ஜெயராணி உத்தரவிட்டார். இதன்பேரில், கோபிச்செட்டிபாளையம் கோட்ட கலால் அலுவலர் ஷீலா மேற்பார்வையில் பவானி போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள கழிப்பிட கால்வாயில் இரு சாட்சிகள் முன்னிலையில் கொட்டி அழிக்கப்பட்டது. பவானி உதவி ஆய்வாளர் வடிவேல்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Related Stories: