திமுக பிரமுகர் கொலை மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தை  சேர்ந்தவர் சண்முகம் (50). திமுக ஒன்றிய விவசாய தொழிலாளரணி துணை  அமைப்பாளராக இருந்தார். முன்விரோதம் காரணமாக கடந்த 30ம் ேததி, மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.இந்நிலையில், வாலாஜாபாத் தாலுகா, வெங்கொடியை சேர்ந்த அஜித் (23) என்பவர், சண்முகம் கொலை வழக்கு தொடர்பாக, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நீதிமன்றத்தில், சரண் அடைந்தார். அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories:

>