இந்தியா - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

நாட்டிங்காம்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாகப் பயிற்சி செய்து தயாராகி உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில், நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்ட தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் (30 வயது) ஹெல்மெட் மீது பந்து பலமாகத் தாக்கியதால் காயம் அடைந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ‘மூளை அதிர்ச்சி’ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததால் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள மயாங்க், முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>