மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பரவல்: 50 வயது நபர் பாதிப்பு

புனே: கேரளாவில் பரவி வரும் ஜிகா வைரஸ், மகாராஷ்டிராவிலும் முதல் முறையாக ஒருவரை தாக்கியுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பும், பலியும் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் நோயும் இங்கு தாக்கி வருகிறது. தற்போது வரையில், இங்கு 100 பேர் வரை இந்த வைரசால் பாதித்துள்ளனர். மேலும், இதன் தாக்குதல் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் நோய் பரவி இருப்பது முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில்  உள்ள பெல்சார் கிராமத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், 50 வயதுடைய ஒருவருக்கு ஜிகா  வைரஸ் நோய் உறுதியாகி இருக்கிறது. இப்பகுதியில் சமீப காலமாக ஜிகா - சிக்குன்குனியா நோய்க்கான அறிகுறிகளுடன் பலர் சிகிச்சைக்கு வந்ததால், அப்பகுதியில் ஜிகா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில்தான், இந்த நபருக்கு ஜிகா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரிய வந்தது.

Related Stories: