நாட்டின் ஜூலை மாத மொத்த ஜிஎஸ்டி வருவாய் விவரத்தை வெளியிட்டது ஒன்றிய நிதியமைச்சகம் !

டெல்லி: நாட்டின் ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக இருந்த நிலையில், ஜூலையில் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது. ஜூலை மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் தகவலை ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டது.

ஒன்றிய அரசு சரக்கு மற்றும் சேவை வரி வசூலித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் முடிந்த நிலையில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு என்ற விவரத்தை ஒன்றிய அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 1.16 (1,16,393) லட்சம் கோடி ரூபாய் என ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, ஒன்றிய ஜிஎஸ்டி வருவாய் 22,197 கோடி ரூபாய் எனவும், மாநில ஜிஎஸ்டி வருவாய் 28,541 கோடி ரூபாய் எனவும், சர்வதேச ஜிஎஸ்டி  57,864 கோடி ரூபாய் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த 27,900 கோடி ரூபாயையும் சேர்த்து) எனவும், செஸ் வருவாய் 7,790 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 92 ஆயிரத்து 849 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மே மாத வருவாய்  1.02 (1,02,709 ) லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

Related Stories: