எம்எல்ஏக்களுக்கு பாராட்டு விழா

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்களின் சங்க தலைவர் ரவி புவனேஸ்வரி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.வி.ராமமூர்த்தி, அபிராமி, ஒன்றிய செயலாளர்கள் ஆ.சத்தியவேலு, தங்கம் முரளி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டமைப்பு செயலாளர் முரளிதரன், பொருளாளர் குமார், துணைத் தலைவர்கள் சுமன், பாபு, பிரகாஷ், துணைச்செயலாளர்கள் அன்பு, முனிராஜ், ஆறுமுகம்,  இணைச் செயலாளர்கள் பாபு, வெங்கடேசன், தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பேசியதாவது, `ஊராட்சி மன்ற தலைவர்கள் யாராக இருந்தாலும் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் கட்சி பாகுபாடின்றி என்னை அனுகி வேண்டிய உதவியை கேட்கலாம் நானும், கிருஷ்ணசாமி எம்எல்ஏவும் செய்ய தயாராக உள்ளோம்,’ என்று பேசினார்.

Related Stories:

>