பாஜ எம்பி பபுல் சுப்ரியா அரசியலுக்கு திடீர் முழுக்கு: அமைச்சர் பதவி பறிப்பால் விரக்தியா?

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பாஜ.வை சேர்ந்த பபுல் சுப்ரியா, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல பாடகரான பபுல் சுப்ரியா, பாஜ. எம்பி.யாக இருக்கிறார். ஒன்றிய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சராக இருந்த இவர், சமீபத்தில் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது பிரதமர் மோடியால் கழற்றி விடப்பட்டார். இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று இவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘குட்பை... நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். எனது எம்பி பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன். நான் எந்த கட்சிக்கும் போகவில்லை,’ என்று கூறியுள்ளார். அமைச்சர் பதவியை சுப்ரியா ராஜினாமா செய்த போது முதலில் வெளியிட்ட பதிவில், ‘ராஜினாமா செய்ய சொன்னார்கள். செய்து விட்டேன்,’ என்று கூறினார். சிறிது நேரத்துக்குள் அதை மாற்றி, ‘நானே ராஜினாமா செய்தேன்,’ என்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>